Thursday, 24 March 2016

ஆதார் எண் விவரம் சேகரிக்காத ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

மாணவர்களின் ஆதார் எண் விவரம் சேகரிக்காத, ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின், ஆதார் எண் விவரங்களை சேகரிக்க, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. ஆதார் எண் உள்ளவர்களிடம், ஆதார் அட்டை நகல் பெறப்பட்டது. அட்டை இல்லாதவர்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்த பணிகள் பல இடங்களில் நடந்து முடிந்தாலும், மாணவர்களின் ஆதார் எண் விவரங்களை, பள்ளிக்கல்வி இயக்குனரகத்துக்கு, தலைமை ஆசிரியர்கள் அனுப்பவில்லை. இந்த எண்ணின்படியே, மாணவர்களின் விவரங்கள் கணினியில் சேர்க்கப்பட்டு, அதன்மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. எனவே, கோடை விடுமுறைக்குள் ஆதார் எண் விவரங்களை அனுப்ப வேண்டும். தாமதமானால், ஆசிரியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Friday, 11 March 2016

தேர்வு நிலை:

DOULATH TESTF NEWS:
2003,
2004,
2005,
2006, (01.06.2006 முதல் Regular) பணி நியமனம் பெற்ற கிட்டதட்ட 55 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் இன்னும் 3 மாதத்தில் அதாவது 01.06.2016-ல் தேர்வு நிலை பெற இருக்கிறார்கள்.

(6%) தேர்வு நிலை பெற இருக்கும் ஆசிரியர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..
இவண்-
ஹி.தவ்லத் உசேன்...

Sunday, 6 March 2016

ஆசியா கோப்பை -2016

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
ஆசிய கோப்பையை இந்தியா வெல்வது இது 6-ஆவது முறையாகும். இதன்மூலம் ஆசிய கோப்பையை அதிகமுறை வென்ற அணி என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
1984 முதல் நடைபெற்று வரும் இந்தப் போட்டி 2014 வரை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியாக நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த முறை டி20 போட்டியாக நடத்தப்பட்டது. இதில் வென்றதன் மூலம் ஆசிய கோப்பை டி20 போட்டியில் வென்ற முதல் அணி என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்தது.
மழை காரணமாக 15 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 5 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய இந்தியா 13.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
வங்கதேச தலைநகர் டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டம் மழை காரணமாக சுமார் 2 மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. இதையடுத்து ஆட்டம் 15 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.
மகமதுல்லா அதிரடி: டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த வங்கதேச அணியில் தொடக்க வீரர்களான தமிம் இக்பால் 13, செளம்ய சர்க்கார் 14, பின்னர் வந்த ஷகிப் அல்ஹசன் 21, முஷ்பிகுர் ரஹிம் 4, கேப்டன் மோர்ட்டஸா 0 என அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் 12 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது வங்கதேசம்.
இதன்பிறகு மகமதுல்லா களம்புகுந்தார். சபீர் ரஹ்மான் நிதானமாக ரன் சேர்க்க, மகமதுல்லா வெளுத்து வாங்கினார். பாண்டியா வீசிய 14-ஆவது ஓவரில் ஒரு பவுண்டரியையும், இரு சிக்ஸரையும் பறக்கவிட்டார் மகமதுல்லா.
இறுதியில் 15 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் குவித்தது வங்கதேசம். மகமதுல்லா 13 பந்துகளில் 33 ரன்களும், சபீர் ரஹ்மான் 29 பந்துகளில் 32 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி 3 ஓவர்களில் வங்கதேசம் 42 ரன்கள் குவித்தது. இந்தியத் தரப்பில் அஸ்வின், நெஹ்ரா, பூம்ரா, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
ஷிகர் தவன் 60: பின்னர் ஆடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 1 ரன்னில் வெளியேற, ஷிகர் தவனுடன் இணைந்தார் விராட் கோலி. அசத்தலாக ஆடிய இந்த ஜோடி 11.1 ஓவர்களில் 94 ரன்கள் குவித்தது. 35 பந்துகளில் அரைசதம் கண்ட ஷிகர் தவன், 44 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து கேப்டன் தோனி களமிறங்கினார். கடைசி 2 ஓவர்களில் இந்தியாவின் வெற்றிக்கு 19 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. அல்-அமீன் வீசிய 14-ஆவது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர், 4-ஆவது பந்தில் பவுண்டரியை விளாசிய தோனி, அடுத்த பந்தில் மற்றொரு சிக்ஸரை விளாச, இந்தியா 13.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
விராட் கோலி 28 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 41, தோனி 6 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஷிகர் தவன் ஆட்டநாயகனாகவும், 5 ஆட்டங்களில் 176 ரன்கள் குவித்த சபீர் ரஹ்மான், தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

Friday, 4 March 2016

 30 ஏ.இ.இ.ஓ.,க்களுக்கு பதவி உயர்வு


சென்னை : பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வு மூலம் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். இதில், 3 சதவீதம் மட்டும் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் உதவி மற்றும் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட உள்ளது.


இதையடுத்து, உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளில், 2016ஜன., 1ம் தேதிப்படி, பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதில், 2004 டிச., 31 வரை பணியில் சேர்ந்த, 30 அதிகாரிகள், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற உள்ளனர். 

 மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் போராட்டம் தொடர்கிறது...


அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான 3 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்தி காலியிடங்களை நிரப்புவது, சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் ஆசிரியர் பணி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காலவரையற்ற அறவழி போராட்டத்தை தொடங்கினர்.


அனைத்து மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் இந்த போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. 

 தொடக்கக்கல்வி - மாணவர்களின கல்வி தரத்தை மேம்படுத்த AEEO/BRTE கொண்ட குழு பள்ளிகளுக்கு முன் அறிவிப்பின்றி "திடீர் பார்வை" SURPRISE VISIT மேற்கொள்ள உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்


 TNPSC - DEPARTMENTAL EXAMINATIONS MAY-2016 NOTIFICATION


 G.O.(Rt).No.142 Dt: February 26, 2016 New Health Insurance Scheme– Notified - Orders issued.

G.O.(Rt).No.142 Dt: February 26, 2016 New Health Insurance Scheme 2012 for the employees of Government Departments and other Organisations – Empanelment of Accredited Hospitals - Approval of additional hospitals based on the recommendations of the Accreditation Committee – Notified - Orders issued.

 தமிழ் நாடு சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு.


#தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு#

*வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் :  .22.04.2016.

*வேட்பு மனு தாக்கல் முடிவு:  .29.04.2016.

*மனுக்கள் பரிசீலனை : 30.04.2016.

*வேட்பு மனுக்கள் வாபஸ் :  .02.05.2016.

#வாக்குப் பதிவு நாள் :  .16.05.2016.

#வாக்கு எண்ணிக்கை:.  19.05.2016.
      

                 -திரு.நஜீம் ஜைதி.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர்.

PANCHAYAT UNION MIDDLE SCHOOL,
APPLICATION FOR PERMISSION

1.      Name of the applicant         :   ______________________________________
2.      Designation                           :  ______________________________________
3.      Date & Day                          : ______________________________________
4.      Reason for permission        :  ______________________________________
5.      Time                                                 :  From ________________ To______________

Signature of the applicant                                        Signature of the Head Master


Signature of the applicant                                        Signature of the Head Master



 
 

Thursday, 3 March 2016

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கான தண்டனைகளை, தேர்வுத்துறை பட்டியலிட்டுள்ளது அதன் விவரம்:

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கானதண்டனைகளை, தேர்வுத்துறை பட்டியலிட்டுள்ளது
அதன் விவரம்:

1.துண்டுத்தாள், புத்தகம், விடைக்குறிப்புகள் வைத்திருந்து, அதை கண்காணிப்பாளர் கவனிக்கும் முன், மாணவர் தானாகவே முன் வந்து, கண்காணிப்பாளரிடம் கொடுத்தால், மாணவரைஎச்சரிக்கை செய்து தேர்வு எழுத அனுமதிக்கலாம். அதன் பின் குறிப்புகள் வைத்திருந்தால், விளக்கம் எழுதி வாங்கி விட்டு, தேர்வை எழுத தடை செய்து வெளியேற்றப்படுவர்.

2. துண்டுத்தாள், விடைக்குறிப்பு வைத்திருப்பதை கண்காணிப்பாளர் கண்டுபிடித்தால், உடனடியாக மாணவரை வெளியேற்ற வேண்டும். துண்டுத்தாளை, மாணவர் பெயர் விவரத்துடன் மண்டல துணை இயக்குனரிடம் ஒப்படைக்க வேண்டும். மாணவர் விடைக்குறிப்பை பயன்படுத்தாவிட்டால், மறு நாள் தேர்வு எழுதலாம். துண்டுத்தாளை பயன்படுத்தியிருந்தால், அன்றைய தேர்வுக்கான விடைத்தாள் நிறுத்தம்செய்யப்படும். ஓர் ஆண்டு அல்லது அடுத்து வரும், இரண்டுபருவ தேர்வுகளுக்கு தடை விதிக்கப்படும்.

3. ஒரு மாணவரை பார்த்து மற்றொரு மாணவர் எழுதினால், உடனேவெளியேற்றப்படுவார். பார்த்து எழுதியதற்கு சாட்சி இருந்தால், அந்த மாணவர் அடுத்து வரும், இரண்டு பருவ தேர்வுகள் அல்லது, ஓர் ஆண்டுக்கு, குறிப்பிட்ட பாடத்தைஎழுத முடியாது.

4.மாணவர் முழுவதுமாக காப்பியடித்தது தெரிந்து,தவறு நிரூபிக்கப்பட்டால், அனைத்து தேர்வுகளையும் எழுத முடியாது. அடுத்து வரும், இரண்டு பருவ தேர்வுகள் ரத்துசெய்யப்படும்.

5. அறை கண்காணிப்பாளரின் உதவியுடன் மாணவர் காப்பியடித்து, அது சாட்சியுடன் நிரூபிக்கப்பட்டால், அடுத்து வரும் தேர்வுகளை எழுத முடியாது.

6.விடைத்தாளை எடுத்து சென்றாலோ, கிழித்து விட்டாலோ, அந்த தேர்வு முழுவதையும் எழுத முடியாது.

7.ஆள்மாறாட்டம் செய்து நிரூபிக்கப்பட்டால்,நிரந்தரமாக தேர்வு எழுத முடியாது.

8.தன்னை தேர்ச்சி பெற செய்யும்படி, தேர்வு தாளிலோ, கடிதம் மூலமோ தேர்வுத்துறை அலுவலகத்துக்கோ, அல்லது தேர்வுத்துறை அதிகாரிகளுக்கோ கடிதம் எழுதினால், அந்த மாணவரின் தேர்வு ரத்து செய்யப்படும்.

9. தேர்வுத்துறை அதிகாரிகள், தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் மாணவரை காப்பியடிக்க விடாமல் தடுத்து, அவர்களை தேர்வு மையத்துக்கு வெளியே அனுப்பிய பின், தேர்வு மையத்திற்கு வெளியே, அதிகாரிகள், ஆசிரியர்களை மாணவர் மிரட்டி,திட்டினால், அந்த மாணவரின் தேர்வு ரத்து செய்யப்படும்.

10.மாணவர் வினாத்தாளை வெளியே, ‘லீக்’ செய்தால், மூன்று ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.

11. முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு, விளக்கம் தர மறுத்தால், அந்த பருவத்தின் தேர்வு முழுவதும் ரத்து செய்யப்படும்.

12.விடைத்தாள் திருத்தத்தில், காப்பியடித்தது தெரிய வந்தால், அந்த மாணவர் இரண்டு பருவ தேர்வுகளை எழுத முடியாது.

13.விடைத்தாளை மாற்றினால், ஐந்து ஆண்டுகள்தேர்வு எழுத தடைவிதிக்கப்படும்.

14.விடைத்தாளில் பெயர், ‘இனிஷியல்’, அல்லது ரகசிய குறியீடு இட்டால், தேர்வு முடிவுகள் ரத்தாகும்.

15.வினாத்தாளில் விடை குறிப்பிட்டு பிற மாணவருக்கு கொடுத்தால், கொடுத்த மாணவரின் அன்றைய தேர்வு ரத்து செய்யப்படும்.

DOULATH TESTF NEWS: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு தமிழகத்தில் காலியாக இருந்த 125 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை பதவிஉயர்வு மூலம் நிரப்பி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
தமிழகத்தில் காலியாக இருந்த 125 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை பதவிஉயர்வு மூலம் நிரப்பி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

இலவச இரத்தம் அரசு மருத்துவமனையில் கிடைக்கிறது:

DOULATH TESTF NEWS:

Free blood in govt hospitals:

Web:
www.tngovbloodbank.in

Email:
www.tngovblooddonor@yahoo.in

"வாட்ஸ்அப்" Updates செய்தல்:

📝குரூப்பில் உள்ள அனைவரும்
Whats up ஐ Update செய்யுங்கள்:

🍀இப்போது Whats upல் Pdf file document போன்றவற்றையும் அனுப்ப முடியும்....

🌺ஆனால் குரூப்பில் உள்ள அனைவரும் Update செய்தால் தான் அது நடக்கும்.

🌻G.O மற்றும் GOVERNMENT
Proceding போன்றவற்றை அப்படியே பெற்று பிரின்ட் செய்ய முடியும்.

🌼குரூப்பில் ஒரு நபர் Update செய்ய வில்லை என்றால் கூட Pdf file அனுப்ப இயலாது...

இயக்குனரகம்-செயலகம் 'லடாய்' அபராத வட்டி கட்டும் ஆசிரியர்கள்:

இயக்குனரகம் - செயலகம் 'லடாய்' அபராத வட்டி கட்டும் ஆசிரியர்கள்.
மத்திய அரசு திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஒவ்வொரு மாதமும், தலைமை செயலகத்தில் சம்பளத்தை இழுத்தடிப்பதால், ஆசிரியர்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர். தமிழக அரசின் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ், 2011 - 12ல், 1,590 முதுநிலை ஆசிரியர்கள்; 6,872 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, மத்திய அரசு திட்டத்துக்கு ஏற்ப, பணியிட நீட்டிப்பு வழங்கப்படும்.இந்த பணியிட நீட்டிப்பு காலம், 2014 டிச., 31ல் முடிந்தது. ஓராண்டாக, ஒவ்வொரு மாதமும் பணி நீட்டிப்பு வழங்கி, கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா உத்தரவிட்ட பிறகே, கருவூலத்தில் இருந்து சம்பளம் வாங்கும் நிலை உள்ளது. ஆனால், அரசாணை பிறப்பிக்க தாமதமாவதால், சம்பளம் வாங்க, 5ம் தேதி வரை ஆகிறது. இதனால், வங்கிகளில் கடன் வாங்கி உள்ள ஆசிரியர்கள், அபராத வட்டி கட்டும் நிலை உள்ளது. கிடப்பில் போடப்பட்ட கடிதம் இது குறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: ஆசிரியர்களுக்கு பொதுத்தேர்வு மற்றும் தேர்தல் பணி துவங்கி உள்ளது. தேர்தல் முடிந்து ஓட்டு எண்ணிக்கை வரை, ஆசிரியர்களின் பணி முக்கியமானது. இந்த நேரத்தில், மாதந்தோறும் அரசாணை பிறப்பித்து சம்பளம் வாங்க காலதாமதமாகும். எனவே, முன்கூட்டியே பணியிட நீட்டிப்பு ஆணை வழங்க கோரிக்கை விடுத்தோம்.இதுதொடர்பாக, பள்ளிக்கல்வி துறை இயக்குனர் கண்ணப்பன், '2015 முதல், ஐந்து ஆண்டுகளுக்கு பணியிட நீட்டிப்பு செய்ய வேண்டும்' என, அரசுக்கு கடிதம் எழுதினார். இந்த கடிதத்தை தலைமை செயலகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கிடப்பில் போட்டனர். தேர்தல் முடியும் வரை, மூன்று மாதங்களுக்கு மட்டுமாவது, தொடர் பணி நீட்டிப்பு கேட்டு கடிதம் எழுதினார். அதையும் அரசு செயலர் அனுமதிக்காமல், பிப்ரவரி மாத சம்பளத்துக்கு மட்டுமே, அரசாணை பிறப்பித்துள்ளார். இதனால், 8,462 ஆசிரியர் குடும்பத்தினர் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கல்வி மைய அதிகாரிகள் மாற்றம்

ஆசிரியர்கள் அதிர்ச்சி விடைத்தாள் திருத்தும் மைய அதிகாரி திடீர் மாற்றம்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்க, ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், கடலுார் மாவட்ட விடைத்தாள் திருத்தும் மைய அதிகாரி, திடீரென மாற்றப்பட்டுள்ளார். இதனால், பொதுத் தேர்வு துவங்கும் முன்னரே, ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வில் எந்த பள்ளி மாநில, 'ரேங்க்' எடுப்பது; எந்த பள்ளி, 100 சதவீத தேர்ச்சி பெறுவது என, கடும் போட்டி உண்டு. இதற்காக, தேர்வு பணிக்காக நியமிக்கப்படும் ஆசிரியர்களில், தங்களுக்கு வேண்டியவர்களை நியமிக்க, ஆசிரியர் சங்கங்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் மூலம் பல வகை சிபாரிசுகள் தேர்வுத் துறைக்கு வருவது உண்டு. இந்த ஆண்டு தேர்வு பணிகளில் குளறுபடி, பொதுத் தேர்வு துவங்கும் முன், துவங்கி விட்டது. கடலுார் மாவட்டம், சி.என்.பாளையம் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன், மாவட்ட விடைத்தாள் திருத்தும் முகாமின் உதவி அலுவலராக பணி அமர்த்தப்பட்டார். இதற்காக, சென்னையில் நடந்த விடைத்தாள் திருத்தும் பணி பயிற்சியிலும் அவர் பங்கேற்றார்.ஆனால், திடீரென அவரது நியமனத்தை, தேர்வுத்துறை ரத்து செய்துள்ளது. அந்த இடத்தில் வேறு ஆசிரியரை, சிபாரிசின் பேரில் நியமிக்க, அதிகாரிகள் முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு, அரசு பள்ளி ஆசிரியர்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பிரச்னைக்குரிய கடலுார் பிளஸ் 2 பொதுத் தேர்வில், கடலுார் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும்குளறுபடிகள் நடக்கும். குறிப்பிட்ட, ஒரு அரசு பள்ளி தேர்வு மையத்தில், மாணவர்கள் காப்பியடிக்க, அங்கு தேர்வுப் பணிக்கு வரும் ஆசிரியர்களே உதவுவதாக, பல முறை புகார் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில், ஆசிரியர் ஒருவரின் மகன், காப்பியடித்து பிடிபட்டார். இது குறித்து, தற்போதைய தேர்வுத் துறை இணை இயக்குனர் அமுதவல்லி விசாரணை நடத்தினார்என்பது குறிப்பிடத்தக்கது. அழுத்தம் தருகின்றனர்:அரசியல் செல்வாக்குள்ள சிலர், குறிப்பிட்ட தேர்வுத்தாள் திருத்தும் மையப் பணியை கேட்டுள்ளனர். மேலிட பெயரைச் சொல்லி, சிலரை தேர்வு மையம் மற்றும் விடைத்தாள் திருத்தும் இடங்களுக்கு பணியில் அமர்த்த அழுத்தம் அளித்து வருகின்றனர். தேர்வுத்துறை வட்டாரங்கள் சந்தேகம் தருகிறது:தேர்வு பணிகளில், பாரபட்சமின்றி ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட வேண்டும். விடைத்தாள் திருத்தும் மையத்தின் முக்கிய பணியில் ஆசிரியர் ஒருவரை நியமித்து, பயிற்சியும் அளித்த பின், திடீரென அவரை நீக்கம் செய்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அதிகாரிகள் எந்த சிபாரிசையும் ஏற்காமல், சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு தேர்வு பணி நியமனத்தை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு, தேர்வுத்துறை அதிகாரிகள் சரியான வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகளை அறிவிக்க வேண்டும். சாமி சத்தியமூர்த்தி, தலைவர், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம்

Tuesday, 1 March 2016

மாணவியரை தொட்டு சோதிக்காதீங்க! தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவு.

மாணவியரை தொட்டு சோதிக்காதீங்க! தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவு.
பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும், 4ல் துவங்குகிறது. 2,420 தேர்வு மையங்களில், ஒன்பது லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வின் போது, 30 ஆயிரம் ஆசிரியர்கள், 5,000 அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கண்காணிப்பு
பணிகளில் ஈடுபட உள்ளனர். தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு, கல்வித்துறை சார்பில் சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன; அதன் விவரம் வருமாறு: மாணவியர் உள்ள தேர்வு அறைகளில், ஆண் ஆசிரியர்களை கண்காணிப்பாளராக பணி அமர்த்த வேண்டாம். ஆசிரியைகளை மட்டுமே, பணி அமர்த்த வேண்டும் மாணவியரின் உடைகளை தொட்டு, எந்த ஆசிரியையும் சோதனை செய்யக் கூடாது மாணவியரிடம் தவறாக நடந்து கொள்ளக்கூடாது மாணவியர் மனம் தளரும் வகையில், கண்காணிப்பாளர் நடந்து கொள்ளக் கூடாது தேர்வு அறைக்கு நிலையான படை மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் வந்தால், மாணவியர் பகுதியில், பெண் அதிகாரி மட்டுமே விசாரிக்கலாம். தவறான தகவலை பரப்ப கூடாது:இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:மாணவியர் காப்பியடிப்பது மற்றும் முறைகேடு என்பது மிக மிக குறைவான நிகழ்வு தான். ஆசிரியர், அதிகாரிகள் தேவையின்றி சந்தேகப்பட்டு மாணவியரிடம் சோதனை செய்யும் போது, அந்த மாணவி பற்றி, சக மாணவியரோ, மாணவரோ வெளியில் வந்து தவறான தகவல்களை பரப்பக் கூடும். கடந்த காலங்களில், இதுபோன்ற நேரங்களில், மாணவியர் விரக்தி அடைந்து, தற்கொலை உள்ளிட்ட விரும்பத்தகாத சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். எனவே, மாணவியர் விஷயத்தில் அவர்களுக்கு கெட்ட பெயர் ஏற்படாதபடி நடந்து கொள்ள ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர். 'ஈவ் டீசிங்' தடுக்கப்படுமா?பிளஸ் 2 பொதுத்தேர்வின் போது, தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும். தேர்வு முடிந்த கையுடன், போலீசார் அங்கிருந்து சென்று விடுவர். அதனால், தேர்வு எழுதி முடித்த மாணவர் மற்றும் மாணவியர், பள்ளி அருகிலேயே நின்று சண்டை போடுதல், மாணவியரை மாணவர்கள் கிண்டலடித்தல் போன்ற நிகழ்வுகள் நடப்பது உண்டு. கடந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வு எழுதிய, சென்னை, எழும்பூர் மாநில மகளிர் பள்ளி மாணவி ஒருவர், தேர்வு மையத்தின் முன், மற்ற மாணவர்களால், 'ஈவ் டீசிங்' செய்யப்பட்டதால், தற்கொலை செய்து கொண்டார். இதுபோன்ற சம்பவங்கள், இந்த ஆண்டு நடக்காமல், போலீசாரும், ஆசிரியர்களும் கடைசி வரை, தேர்வு மையத்தில் நின்று, மாணவ, மாணவியரை வீட்டிற்கு செல்ல அறிவுறுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது

AEEO TEST:

DOULATH TESTF NEWS:

TNPSC DEPARTMENTAL EXAMINATIONS MAY-2016
NOTIFICATION.

👍Notification No: 4/2016

👍Advertisement No: 431

👍Date Of Notification : 01.03.2016.

👍Date & Time Of Closing: 31.03.2016 Till 5.45 pm.

👍Date Of Examination : 24.05.16 To 31.05.16.

www.tnpsc.gov.in

துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்:

இடைநிலைஆசிரியர்கள்:

1. 004 - Deputy Inspectors Test-First Paper பள்ளித் துணை ஆய்வாளர் தேர்வு பகுதி-1 (Relating To Secondary And Special Schools) (Without Books).

2. 017 - Deputy Inspector’s Test--Second Paper பள்ளித் துணை ஆய்வாளர் தேர்வு பகுதி-2 (Relating To Elementary Schools).
(Without Books)

3. 119 - Deputy Inspector’s Test Educational Statistics.புள்ளியியல்
(With Books).

4 . 176 - Account Test For Subordinate Officers - Part I.
கணக்கியல் தேர்வு பகுதி-1
(or)114 The Account Test for Executive Officers.
(With Books).

5 . 208 - The Tamil Nadu Government Office Manual Test (Previously The District Office Manual--Two Parts).
(With Books).

பட்டதாரிஆசிரியர்கள்:

1 . 176 - Account Test For Subordinate Officers - Part I .(or)114 The Account Test For Executive Officers.
(With Books).

2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test (Previously The District Office Manual--Two Parts).
(With Books).

முதுகலை பட்டதாரிஆசிரியர்கள்:

1 . 176 - Account Test For Subordinate Officers - Part I .(or)114 The Account Test for Executive Officers.
(With Books).

2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test (Previously The District Office Manual--Two Parts).
(With Books).

மாவட்டக்கல்வி அலுவலர்:

1 . 176 - Account Test For Subordinate Officers - Part I. (or)114 The Account Test For Executive Officers.
(With Books).

2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test (Previously The District Office Manual--Two Parts).
(With Books).