Wednesday, 16 May 2018

RAMZAN MUBARAK TO ALL

ரமலான் நோன்பு நாளை முதல் தொடங்குகிறது.

Tuesday, 15 May 2018

தோனி ரசிகருடன் இருப்பது யார் என்று பார்க்க..

தோனி ரசிகர் உடன் ஒரு சந்திப்பு இருப்பது...

அரசு செயலர் திரு சித்திக் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.. தொடர்ந்து மனு அளிக்கலாம்.. அரசு ஊதிய முரண்பாடு களைய அமைக்கப்பட்ட குழு இன்றோட முடிகிறது. இருந்தாலும் தொடர்ந்து மனு அளிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

அரசு செயலர் திரு சித்திக் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது..

தொடர்ந்து மனு அளிக்கலாம்..

அரசு ஊதிய முரண்பாடு களைய அமைக்கப்பட்ட குழு இன்றோட முடிகிறது.

இருந்தாலும் தொடர்ந்து மனு அளிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

Wednesday, 24 August 2016

சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு பொருந்தாது: உயர்நீதிமன்றம்.

சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு பொருந்தாது: உயர்நீதிமன்றம்.

Saturday, 16 April 2016

அகவிலைப்படி உயர்வுக்கான ஆணை நாளை வெளியாக வாய்ப்பு?

தமிழக அரசு ஊழியர்களுக்கான 6% அகவிலைப்படி உயர்வுக்கான ஆணை நாளை வெளியாக வாய்ப்பு?

அண்மையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைமுறை விதிகள் அமுலில் உள்ளதால் அறிவிப்பு ஏதும் வெளியாக வாய்ப்பு இல்லையென்றும், ஆனால் கோப்புகள் தயாராக உள்ளதெனவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 6% அகவிலைப்படி உயர்வுக்கான ஆணை நாளை வெளியாக வாய்ப்பு உள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. அகவிலைப்படி உயர்வு 01.01.2016 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

தகவல் : க.சாந்தகுமார், தலைமை நிலைய செயலாளர், தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணி.

Thursday, 24 March 2016

ஆதார் எண் விவரம் சேகரிக்காத ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

மாணவர்களின் ஆதார் எண் விவரம் சேகரிக்காத, ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின், ஆதார் எண் விவரங்களை சேகரிக்க, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. ஆதார் எண் உள்ளவர்களிடம், ஆதார் அட்டை நகல் பெறப்பட்டது. அட்டை இல்லாதவர்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்த பணிகள் பல இடங்களில் நடந்து முடிந்தாலும், மாணவர்களின் ஆதார் எண் விவரங்களை, பள்ளிக்கல்வி இயக்குனரகத்துக்கு, தலைமை ஆசிரியர்கள் அனுப்பவில்லை. இந்த எண்ணின்படியே, மாணவர்களின் விவரங்கள் கணினியில் சேர்க்கப்பட்டு, அதன்மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. எனவே, கோடை விடுமுறைக்குள் ஆதார் எண் விவரங்களை அனுப்ப வேண்டும். தாமதமானால், ஆசிரியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Friday, 11 March 2016

தேர்வு நிலை:

DOULATH TESTF NEWS:
2003,
2004,
2005,
2006, (01.06.2006 முதல் Regular) பணி நியமனம் பெற்ற கிட்டதட்ட 55 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் இன்னும் 3 மாதத்தில் அதாவது 01.06.2016-ல் தேர்வு நிலை பெற இருக்கிறார்கள்.

(6%) தேர்வு நிலை பெற இருக்கும் ஆசிரியர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..
இவண்-
ஹி.தவ்லத் உசேன்...