Friday, 26 February 2016

ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு எப்போது? தேர்வு எழுதிய 8 லட்சம் பேர் காத்திருப்பு...
ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு நடந்து முடிந்து, எட்டு மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாததால், தேர்வெழுதிய, எட்டு லட்சம் பேர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள, 4,362 ஆய்வக உதவியாளர் பணிக்கு, கடந்த ஆண்டு மே, 31ல் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது; இதில், எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர்.
தேர்வில் வெற்றி பெறுவோரில், ஒரு காலியிடத்திற்கு, ஐந்து பேர் என்ற விகிதத்தில் நேர்முகத் தேர்வு நடத்தி, அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனம் செய்ய அரசு திட்டமிட்டது. நேர்முகத் தேர்வில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எனப்படும், 'சீனியாரிட்டி'க்கு - 10; உயர் கல்வித் தகுதிக்கு - 5; பணி அனுபவத்துக்கு - 2; நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு - 8 என, மொத்தம், 25 மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுபவருக்கே பணி ஒதுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. எழுத்துத் தேர்வு மதிப்பெண்ணை கணக்கிடாமல், நேர்முகத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்தால், அதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இருப்பதாக, தேர்வர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், எழுத்துத் தேர்வையும் கணக்கிட்டு, தேர்வு முடிவை அறிவிக்க உத்தரவிட்டது.எனினும், தேர்வு நடந்து முடிந்து, எட்டு மாதங்கள் ஆகியும், முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இது, தேர்வர்கள் மத்தியில் அச்சத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்திஉள்ளது.
நேர்முகத் தேர்வு மூலம், ஆய்வக உதவியாளர் பணியில் சேர்த்து விடுவதாக, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் சிலர், லட்சக்கணக்கில் பணம் வசூலித்ததாக புகார் எழுந்துள்ளது. விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கஉள்ளதால், பணத்தை கொடுத்த தேர்வர்கள் பலரும், தங்கள் பணம் என்ன ஆகும் என தெரியாமல் புலம்பத்துவங்கியுள்ளனர்.

RL LIST 2016:

DOULATH TESTF NEWS:

வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்
(RH LIST)-2016:

👍மார்ச்:
04
வைகுண்டசாமி ஆராதனை விழா (வெள்ளி)
07
மகா சிவராத்திரி (திங்கள்)
24
மாண்டி வியாழன் (வியாழன்)

👍ஏப்ரல்: 21
சித்ரா பௌர்ணமி (வியாழன்)

👍ஜூன்:07-
இரமலான் நோன்பு தொடக்கம் (செவ்வாய்)

👍ஜூலை: 02-
சாபே காதர் (சனி)

👍ஆகஸ்டு:02-
ஆடிப் பெருக்கு(செவ்)
12-
வரலட்சுமி நோன்பு, (வெள்)
18-
இரிக்கு உபாகர்மம், யசூர் உபாகர்மம் (வியா)
19-
காயத்திரி ஜெபம்(காயத்ரி ஜபம்)

👍செப்டம்பர்:12-
அராபத் (திங்கள்)

👍அக்டோபர்:03-
இஸ்லாமியர் புத்தாண்டு (திங்கள்)

👍நவம்பர்:02-
கல்லறைத் திருநாள் (திங்கள்)
14-
குருநானக் பிறந்தநாள் (திங்கள்)

👍டிசம்பர்:12
கார்த்திகை தீபம் (திங்கள்).

DOULATH TESTF NEWS:

DOULATH TESTF NEWS:

🎽🍎சமையல் கியாஸ், மண்எண்ணெய், மானியங்களை குறைக்க வேண்டும்: பொருளாதார ஆய்வறிக்கை பரிந்துரை

🎽🍎தொடக்ககல்வி - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - துவக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் வைப்பு நிதி கணக்குகள் மாநில கணக்காயருக்கு மாற்றம் செய்து அரசானை வெளியீடு - பணிகளை துரிதப்படுத்த மாநில/மாவட்ட அளவில் "NODAL OFFICER" நியமனம் செய்து இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

🎽🍎7வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களில் 13 பேர் மயக்கம்

🎽🍎29–ந்தேதி மத்திய பொது பட்ஜெட்: வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுமா?

🎽🍎மேல்நிலைத்தேர்வு மார்ச் - 2016 - மைய வாரியாக வினாத்தாட்கள் எண்ணிக்கை ஒதுக்கீடு - உறுதி செய்து சான்று அனுப்ப அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் (மேல்நிலை) இணை இயக்குநர் அவர்களின் உத்தரவு கடிதம்.

🎽🍎ஏப்ரல் கடைசி வாரத்தில் தமிழக சட்டப்பேரவைத்தேர்தல்: மார்ச் 6-ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

🎽🍎அழகப்பா பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் தொலைதூரக் கல்வி 2015 டிசம்பருக்கான தேர்வுமுடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

🎽🍎100–க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு

🎽🍎புதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் அரசாணை வெளியீடு

🎽🍎8ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியீடு.

🎽🍎பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் 100% அதார் அட்டை எடுக்க நடவடிக்கை மேற்கொள்ள இயக்குனர்உத்தரவு

🎽🍎TNPSC:உதவி புள்ளியியல் ஆய்வாளர் பணியிடம்: சான்றிதழ் சரிபார்க்க டி.என்.பி.எஸ்.சி. அழைப்பு

🎽🍎பிளஸ் 2 மாணவர்கள் கவனத்திற்கு... 15 நிமிடம் தாமதமானால் தேர்வு எழுத முடியாது

🎽🍎சி.ஏ., நுழைவுத்தேர்வு, பாடத்திட்டம் மாற்றம்: இனி பிளஸ் 2 தேர்ச்சி கட்டாயம்

🎽🍎ஊதிய பட்டியலை திருத்தி மோசடி அரசு பள்ளி ஊழியர் 'சஸ்பெண்ட்'

🎽🍎பிளஸ் 2 தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்ட பொருள்கள் விவரம்

🎽🍎பள்ளிக் கல்வித் துறை மூலம் ரூ.126.94 கோடியில் கல்வி உபகரணங்கள்'

🎽🍎விழிப்புணர்வு சிறப்பு ரயில் மார்ச் 1-இல் வேலூர் வருகை

ஆண்டு விழா...

பள்ளிபாளையம் ஒன்றியம்,  ஊ.ஒ.தொ.பள்ளி, கொக்கராயன்பேட்டையில், பள்ளி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது...

எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய மக்கள் கூட்டம்.....

மாணவர்களுக்கு பதக்கம், பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது....

JCI Tiruchengode Sanjeevanam சார்பில் ரூ.25000 மதிப்பில் RO Water Filter வழங்கப்பட்டது...

பள்ளியைத் தொடங்கி 110 வருடங்கள் ஆகிவிட்டது. முதன் முறையாக மிகப்பெரிய விழா என்பதால், மிகப்பெரிய வரவேற்பு.....

8ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியீடு.

எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுகான பொதுத்தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்:

தேதி                பாடம்
18-04-2016      தமிழ்
20-04-2016      ஆங்கிலம்
21-04-2016      கணிதம்
22-04-2016      அறிவியல்
23-04-2016      சமூக அறிவியல.

பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வித் துறை கட்டுப்பாடு: எழுதிய விடைகளை அடித்தால் தேர்வு முடிவுகள் நிறுத்தப்படும்

அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தாங்கள் எழுதிய விடைகளை முழுமையாக அடித்தால் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்படும். அடுத்த இரு பருவங்களுக்கு தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும் என கல்வித் துறை எச்சரித்துள்ளது.

29–ந்தேதி மத்திய பொது பட்ஜெட்: வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது?

பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று ரெயில் மந்திரி சுரேஷ் பிரபு ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பயணிகள்கட்டணம் உயர்த்தப்படவில்லை. பழைய திட்டங்களை விரைந்து நிறைவேற்றும் வகையில் புதிய திட்டங்கள், புதிய ரெயில்கள் அறிவிக்கப்படவில்லை.


அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மத்திய பட்ஜெட்வருகிற 29–ந்தேதி (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. நிதி மந்திரி அருண்ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் வருவதால் பட்ஜெட்டில் பல்வேறு சலுகைள், அறிவிப்புகள் இருக்கும்.குறிப்பாக வருமானவரி செலுத்வோர் பட்டியலில் அதிக அளவில் உள்ள நடுத்தர வர்க்கத்தினருக்கு சலுகைகள் அளிக்கப்படும் என்று தெரிகிறது. இவர்களுக்கு தற்போதுரூ.2½ லட்சமாக இருக்கும் வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படக்கூடும் என்று தெரிகிறது.மேலும் நடுத்தர வர்க்கத்தினரும் கவரும் வகையில் எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் நுகர்வோர் பயன்படுத்தும் தயாரிப்புகளுக்கு வரிச்சலுகைகள் அளிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.அரசு ஊழியர்களுக்கான 7–வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது.

இதன் மூலம் அரசுக்கு ரூ.15 ஆயிரம்கோடி முதல் ரூ.25 ஆயிரம் கோடி வரை நிதிச்சுமை அதிகரிக்கும்.தற்போது வீட்டுக் கடன்களுக்கான வட்டிச் சலுகை ரூ.2 லட்சம் வரை என உள்ளது. இதுவும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.நிதி கட்டுப்பாடு தொடர்பாக பொருளாதார வல்லுனர்களிடம் கருத்து கேட்டு அறியவும் மத்திய அரசுமுடிவு செய்துள்ளது.

ஏப்ரல் கடைசி வாரத்தில் தமிழக சட்டப்பேரவைத்தேர்தல்: மார்ச் 6-ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

தில்லியில் 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி நேற்று இறுதி கட்ட ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் தேர்தல் ஒரே கட்டமாகவும், மே.வங்கம்,அசாமில் பல கட்டங்களாகவும் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் மத்தியில்நடைபெறலாம்.


தமிழகத்துக்கு ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே முதல்வாரத்தில் வாக்குப்பதிவு நடைபெறலாம் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் மார்ச் 6ம் தேதிக்குள் தேர்தல் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிகிறது.

7வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களில் 13 பேர் மயக்கம்

சென்னையில் 7வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் இடைநிலை ஆசிரியர்களில் 13 பேர் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சென்னை டிபிஐ வளாகத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.


பணிநியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தை அதிகரித்து தர வேண்டும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான 10,000 ஆசிரியர்களுக்கு முறையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே பணி, ஒரே கல்வி தகுதி, ஊதியம் மட்டும் குறைவாக வழங்கபடுவது ஏன்? எனஅவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் நடத்தப்போவதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
my new blogspot.com